தர்மபுரியில் தேசிய மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
தர்மபுரி
தர்மபுரி:
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10-ந் தேதி (இன்று) தேசிய மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி உறுதிமொழியை வாசித்தார். உறுதிமொழியை பின் தொடர்ந்து வாசித்து பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, தனித் துணை கலெக்டர் சாந்தி உள்பட அரசுத்துறை அலவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story