எருமாட்டில் ரத்ததான முகாம்
எருமாட்டில் ரத்ததான முகாம் நடந்தது.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் அருகே எருமாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூடலூர் அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் 20 பேர் ரத்ததானம் செய்தனர். அவர்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு, கூடலூர் அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் லோகேஸ்குமார், நுகர்வோர் மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அனிபா, சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story