நெற்பயிர்களை தாக்கும் கருகல் நோய்
ராஜபாளையம் பகுதிகளில் நெற்பயிர்களை கருகல் நோய் தாக்கி உள்ளது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பகுதிகளில் நெற்பயிர்களை கருகல் நோய் தாக்கி உள்ளது.
கருகல் ேநாய்
ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் செல்லும் சாலையில் உள்ள தேவதானம், சேத்தூர் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்தநிலையில் இந்த நெற்பயிர்களை கருகல் நோய் தாக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இந்த நோயை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடு்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ராஜபாளையம் வேளாண்மை துணை இயக்குனர் வனஜா, பருத்தி ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் விமலா, ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி ஆகியோர் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்தனர்.
நிவாரணம்
நெல் வயல்களில் சமீபத்தில் பரவி வரும் பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்த நைட்ரஜன் உரத்தை அளவாக பயன்படுத்த வேண்டும்.
இனிமேல் ஏற்படக்கூடிய நோய்க்கு என்னமாதிரியான உரங்கள், மருந்துகள் இட வேண்டும் என அவர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். ஏற்கனவே காய்ந்த நிலையில் உள்ள வயல்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.