கருகி வரும் நெற்பயிர்கள்
ஒரத்தநாடு பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
ஒரத்தநாடு பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாடு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் திருவோணம் பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த நெற்பயிர்கள் கதிர் விடும் தருவாயில் உள்ளது. இன்னும் சில தினங்களுக்கு பாசன தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் நெற்பயிர்களை அறுவடை செய்துவிடலாம் என்று விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்ததால், பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
நிவாரணம் வழங்க வேண்டும்
தற்போது கல்லணை கால்வாயில் பாசனத்துக்கு திறந்து விடும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரித்த நிலையில் கதிர் விடும் தருவாயில் உள்ள நெற்பயிர்கள் கருக தொடங்கி உள்ளது. விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருக தொடங்கி இருப்பதால், குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெருமளவில் பொருளாதாரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.