உதவித்தொகையை உயர்த்தி வழங்க பார்வையற்றோர் மனு


உதவித்தொகையை உயர்த்தி வழங்க பார்வையற்றோர் மனு
x

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உதவித்தொகையை உயர்த்தி வழங்க பார்வையற்றோர் மனு அளித்தனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நீலகிரி பார்வையற்றோர் சங்க அமைப்பாளர் மோகன் மற்றும் பார்வையற்றோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- கடந்த பல ஆண்டுகளாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 மட்டும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், பிற மாநிலங்களில் ரூ.1,600 முதல் ரூ.3,500 வரை வழங்கி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ரூ.ஆயிரத்தில், ஒரு நபர் தன்னை பராமரித்து கொள்வது நடைமுறைக்கு இயலாதது ஆகும். எனவே, பார்வையற்றோருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Next Story