நத்தக்கரை சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் பங்கேற்பு


நத்தக்கரை சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் பங்கேற்பு
x

நத்தக்கரை சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கலந்து கொண்டனர்.

சேலம்

தலைவாசல்:

முற்றுகை போராட்டம்

சேலம்- உளுந்தூர்பேட்டை இடையே 31 கிலோ மீட்டர் தூரம் இரு வழிச்சாலையாக உள்ளதை நான்கு வழிச்சாலையாக மாற்றக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர். இந்த நடைபயணம் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் நடந்தது.

இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென தலைவாசல் நத்தக்கரை சுங்கச்சாவடி வழியாக சென்றனர். அவர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலித்துள்ளனர். இதை கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போலீசார் சமரசம்

தகவல் அறிந்த தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில துணை செயலாளர் தங்கவேல், மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல் ஆகியோர் அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், இருவழிச்சாலையாக உள்ளதை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story