ரத்த தான முகாம்
கடையம் அருகே கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
கடையம்:
கடையம் அருகே வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. கல்லூரியின் செயலர் சகாயஜான், முதல்வர் குளோரி தேவ ஞானம் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட அலுவலர் சுந்தர் வரவேற்றார். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் தென்காசி மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அருண் நன்றி கூறினார். நெல்லை மருத்துவகல்லூரி ரத்த வங்கி மருத்துவர் புனித ரஞ்சிதம் ஆனு தலைமையிலான ரத்தவங்கிக் குழுவினர் முகாமை நடத்தினர். மூன்றாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். மேலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு ரத்தப்பிரிவுக் கண்டறியும் முகாமும் நடத்தப்பட்டது.