கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ரத்த தான முகாம்


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ரத்த தான முகாம்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் நாட்டு நல பணித்திட்ட அணிகள் 49, 50, பெண்கள் கூட்டமைப்பு மன்றம், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி மற்றும் காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கல்லூரி வளாகத்தில் மாபெரும் ரத்ததான முகாமினை நடத்தியது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி முகாமினை தொடங்கி வைத்தார்.

முகாமில், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒமர் சாஹிர், செவிலியர்கள் ஞானம் கலையரசி, ஹெலன் வசந்தா மேரி, மதி, ஆய்வக நுட்பவியலாளர்கள் சுமதி, ஸ்டெல்லா ஆகியோரும் மற்றும் காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு ரத்த வகை பரிசோதனை, ரத்த அழுத்த அளவு ஆகியவற்றை பரிசோதனை செய்தனர். டாக்டர் ஒமர் சாஹிர் ரத்த தானத்தின் அவசியம் குறித்தும், ரத்தத்தின் இன்றியமையாமை குறித்தும் பேசினார். பின்னர் கல்லூரி மாணவர்களிடமிருந்து 56 அலகுகள் ரத்தம் தானமாக பெறப்பட்டது. ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கியின் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா மற்றும் பெண்கள் கூட்டமைப்பு மன்றம் ஒருங்கிணைப்பாளர் ஷீலா ஜெபஸ்டா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story