ரத்த சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்க நடவடிக்கை


ரத்த சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்க நடவடிக்கை
x

காரைக்குடி மற்றும் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிகளில் ரத்த சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தா

சிவகங்கை

காரைக்குடி மற்றும் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிகளில் ரத்த சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எந்திரங்கள்

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது ரத்த சுத்திகரிப்பு செய்வதற்காக ஏற்கனவே உள்ள 6 எந்திரங்களுடன் கூடுதலாக 6 எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 12 எந்திரங்களையும் பராமரிக்க போதுமான தொழில்நுட்ப பணியாளர்களும் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் ரத்த சுத்திகரிப்பு செய்து வருபவர்கள் கூட தற்போது சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வந்து பயன்பெறுகின்றனர்.

இதேபோன்று தேவகோட்டை மற்றும் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிகளிலும் ரத்த சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்குடி தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு தர மதிப்பீட்டு சான்றிதழ் கிடைத்துள்ளது.

தர மதிப்பீடு

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் தர மதிப்பீட்டு சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவமனையில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு, பூஸ்டர் ஊசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தவறாது இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story