ரத்த கையெழுத்து இயக்க போராட்டம்


ரத்த கையெழுத்து இயக்க போராட்டம்
x

ரத்த கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது

மயிலாடுதுறை

கடந்த ஆட்சியில், முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மீது சுமத்தப்பட்ட உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டினை ரத்து செய்து அவருக்கு ஓய்வுகால பயன்களை முழுமையாக வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரத்த கையெழுத்து இயக்க போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சிங்காரவேல், மாவட்ட இணை செயலாளர் செந்தில்குமார், வட்டார செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு உரிய படிவத்தில் ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.


Next Story