ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x

டாக்டர்.ஆர்.கே.எஸ்.கல்லூரி சார்பில் ரத்ததான முகாம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர்.ஆர்.கே.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75-வது சுதந்தின விழாவை முன்னிட்டு 75 மாணவர்கள் ரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு டாக்டர்.ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர்.குமார், செயலாளர் கோவிந்தராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியின் ரத்தவங்கி அலுவலர் டாக்டர் விஜயகுமார் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து ரத்தம் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

இந்த முகாமில் கல்லூரியின் என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ்., ஆர்.ஆர்.சி., ஒய்.ஆர்.சி. ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் உதவிபேராசிரியைகள் என 75 பேர் ரத்ததானம் வழங்கினார்கள். இதில் மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, சுகாதார துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் ஆறுமுகம், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்ரமணி, கல்லூரி துணை முதல்வர் ஜான்விக்டர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆர்.ஆர்.சி.ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் நன்றி கூறினார்.


Next Story