போதைப் பொருட்களை தடைசெய்யக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் போதைப் பொருட்களை தடை செய்யக்கோரி பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டையில் போதைப் பொருட்களை தடை செய்யக்கோரி பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. சார்பில், கஞ்சா, குட்கா, பான் பராக் உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்யக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி தலைமை தாங்கினார்.
கிழக்கு மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன், மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் நல்லூர் எஸ்.பி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன் வரவேற்றார்.
தடைசெய்ய வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கஞ்சா, குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்களை தடை செய்யக்கோரி, கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் ஜானகிராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக் ராஜா, வாலாஜா மத்திய ஒன்றிய தலைவர் குமார், வாலாஜா மத்திய ஒன்றிய செயலாளர் வி.எல்.எஸ். சபரி கிரிசன், மாநில செயற்குழு உறுப்பினர் காவனூர் சுப்பிரமணி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பா.ம.க. நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளைஞர் அணி செயலாளர் பகவான் கார்த்தி நன்றி கூறினார்.