கோரிக்கைகளை வலியுறுத்திபி.எம்.எஸ். போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்திபி.எம்.எஸ். போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
கோரிக்கைகளை வலியுறுத்திபி.எம்.எஸ். போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம் நடத்தினர்.
குமரி மாவட்ட பாரதீய மஸ்தூர் (பி.எம்.எஸ்.) அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று வாயிற்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 3 ஆண்டுகளாக இருந்ததை தன்னிச்சையாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்ததைக் கண்டித்தும், பேச்சுவார்த்தை மரபுகளை மீறி தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக தனி அறையில் அழைத்து பேசியதைக் கண்டித்தும், 28 மாத அரியர் தொகை வழங்காததை கண்டித்தும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வாயிற்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு சங்க தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஜோதிலிங்கம், துணைத்தலைவர் ஜெகநாதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் வேலப்பன், சுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பி.எம்.எஸ். மாவட்ட அமைப்பாளர் குமாரதாஸ் சிறப்புரையாற்றினார். சங்க துணைத்தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.