பாதுகாப்பான இடங்களில் படகுகள் நிறுத்தம்
பாதுகாப்பான இடங்களில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை
புயல் எச்சரிக்கை காரணமாக சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள 16 மீனவ கிராம மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவளத்துறை அறிவுறுத்தல் காரணமாக நேற்றும் இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்பட்டது.திருமுல்லைவாசல், பூம்புகார் ஆகிய கடலோர கிராமங்களில் ரோந்து சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒலி பெருக்கி மூலமாக, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அப்போது மறுஅறிவிப்பு வரும் வரையில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்றும், படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story