குற்றாலத்தில் படகு சவாரி


குற்றாலத்தில் படகு சவாரி
x

குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கப்பட உள்ளது.

தென்காசி

குற்றாலத்தில் தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீசனின் போதும் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் வழியில் உள்ள மேல வெண்ணமடை குளம் படகு குழாமில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலத்தில் கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் படகு சவாரியும் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் படகு சவாரி தொடங்கப்படுகிறது.

இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் இதனை தொடங்கி வைக்கிறார்கள். இதனை முன்னிட்டு படகு குழாமில் நேற்று சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், மேலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர். மொத்தம் 32 படகுகள் இயக்குவதற்கு தயாராக உள்ளன. மேலும் சவாரி செய்வோருக்கு பாதுகாப்பு உடைகளும் தயார் நிலையில் உள்ளன.


Next Story