குமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு சேவை ரத்து - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...!


குமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு சேவை ரத்து - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...!
x

குமரியில் கடல் சீற்றம் காரணமாக இன்று படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி,

உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்று கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் சூறாவளி காற்று காரணமாக அலைகள் பயங்கரமாக காணப்படுகிறது. கடலில் திடீரென பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. சமீப காலமாக கடலில் பல இயற்கையான மாற்றங்கள் காணப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக கடல் சீற்றம்,கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் ஏற்றம் இறக்கம், கடல் அலை இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பது இவ்வாறாக இயற்கையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இன்று கடலில் சூறாவளி காற்று வீசியதால் அலைகள் அதிபயங்கரமாக கரையில் மோதி சிதறுகிறது.

விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.


Next Story