கடல்நீர்மட்டம் தாழ்வால் தொடரும் சம்பவம்:விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்


கடல்நீர்மட்டம் தாழ்வால் தொடரும் சம்பவம்:விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
x
தினத்தந்தி 16 Sept 2023 12:45 AM IST (Updated: 16 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கடல்நீர்மட்டம் தாழ்வால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமானது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. காலை 10 மணிக்கு கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து மீண்டும் படகு சேவை தொடங்கியது.

கன்னியாகுமரியில் கடல்நீர்மட்டம் தாழ்வால் படகு போக்குவரத்து தாமதமாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது.

---


Next Story