போடி, சின்னமனூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்


போடி, சின்னமனூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடி, சின்னமனூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

போடி மற்றும் மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி, போடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, அம்மாபட்டி, எல்லப்பட்டி, குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர், புலிகுத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கும் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story