போடி அரசு பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
போடி அரசு பொறியியல் கல்லூரியில் தொழிநுட்ப கருத்தரங்கு நடைபெற்றது
போடி அரசு பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான ஒருநாள் தொழில்நுட்ப கருத்தரங்கு கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட பி.எஸ்.என்.எல். கோட்ட பொறியாளர் ராமர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்ந்த பல்வேறு கண்டுபிடிப்புகள், கருவிகள், எந்திரங்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தொழில்நுட்ப வினாடி வினா போட்டிகளும் நடத்தப்பட்டு சான்றுகள், பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கருத்தரங்கு மலரும் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை போடி அரசு பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.