ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா


ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 6 தொடக்கப்பள்ளிகள், 1 நடுநிலைப்பள்ளி, 2 உயர்நிலைப்பள்ளிகள், 5 உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் 19 பள்ளி, கல்லூரி விடுதிகளும் உள்ளன.இந்த துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கடைசி வாரம் திருப்பூர், காங்கயம் கோட்டங்களில் மனிதநேய வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காங்கேயம் கோட்டத்தின் சார்பில், உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனித நேய வாரவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். காங்கயம் ஆதிராவிடர் நல தனி தாசில்தார் கனிமொழி கலந்து கொண்டார். காங்கேயம் கோட்டத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரி விடுதி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, பாட்டு, கட்டுரை, ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதனையடுத்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் காங்கயம் கோட்டத்தின் கீழ் உள்ள பள்ளி கல்லூரி விடுதி ஆசிரியர்கள், பணியாளர்கள், சமையலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Next Story