கால்வாயில் மிதந்து வந்த பெண் பிணம்
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே மயிலாடி கூண்டு பாலம் அருகே கால்வாயில் நேற்று காலையில் 85 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், இறந்தவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் பிணத்தை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மயிலாடி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ஹரிநயினார் பிள்ளை ெகாடுத்த புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.