பவானி ஆற்றில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட வாலிபர் பிணம்:கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு


பவானி ஆற்றில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட வாலிபர் பிணம்:கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
x

4 தனிப்படை அமைப்பு

ஈரோடு

கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர் செரையாம்பாளையத்தில் பவானி ஆறு செல்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த ஆற்றில் தலை, கை, கால்கள் இல்லாத முண்டமாக வாலிபர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. அன்று மாலை கைகள், கால்கள், தலை தனித்தனியாக மீட்கப்பட்டன. இதனால் யாரோ ஒரு வாலிபரை துண்டு துண்டாக வெட்டி பவானி ஆற்றில் வீசியது தெரியவந்தது. கொைல செய்யப்பட்டவர் யார்?, எந்த ஊரைச்சேர்ந்தவர்?, அவரை கொலை செய்தவர்கள் யார்?் என்று தெரியவில்லை. இதனால் இந்த வழக்கில் துப்பு துலக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி தலைமையில் ஒரு தனிப்படையும், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ் தலைமையில் ஒரு தனிப்படையும் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னராஜ், மோகனன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story