தெப்பக்குளத்தில் வாலிபர் பிணம்


தெப்பக்குளத்தில் வாலிபர் பிணம்
x

வள்ளியூர் கோவில் தெப்பக்குளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் முருகன் கோவில் தெப்பக்குளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். நேற்று காலை அங்கு குளிக்க சென்றவர்கள் பார்த்து வள்ளியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த வாலிபர் யார்? குளத்தில் குளிக்க வந்த இடத்தில் நீச்சல் தெரியாமல் மூழ்கி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story