தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் பிணம் மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் பிணம் மீட்கப்பட்டது.
பொன்னமராவதி அருகே ஆலவயல் ஆலங்கண்மாய் சாலையை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் தாமரைச்செல்வன் (வயது 32). இவர் மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். தாமரைச்செல்வனை அவரது தந்தை ஆண்டியப்பன் பொன்னமராவதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார். சம்பவத்தன்று ஆண்டியப்பன், அவரது மனைவி, தாமரைச்செல்வன் ஆகியோர் ஒரு கடையில் டீ குடித்தனர். பின்னர் அங்கிருந்து சென்ற தாமரைச்செல்வன் கடைக்கு செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று கொன்னைக்கண்மாய் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்த ேபாது, காணமால் போன தாமரைச்செல்வன் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதற்கிடையே போலீசார் தாமரைச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைச்செல்வன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.