விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 1:06 PM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து திருமணத்துக்கு பெண் பார்க்க வந்தபோது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திருவாரூர்

குவைத் நாட்டில் வேலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லை விளாகம் பகுதியை சோ்ந்தவர் ராஜேந்திரன். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகன் மணிகண்டன்(வயது 35).

தந்தை இறந்து விட்டதால் மணிகண்டன் தனது தாயார் வெற்றி செல்வியுடன் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தார்.

பெண் பார்க்க வந்தபோது விபத்தில் சிக்கினார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது திருமணத்துக்கு பெண் பார்க்க வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரான தில்லை விளாகத்துக்கு மணிகண்டன் மட்டும் வந்தார்.

சம்பவத்தன்று தனது நண்பருடன் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டிக்கு சென்றார். அப்போது சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

உடல் உறுப்புகள் தானம்

அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து டாக்டர்கள் மணிகண்டனின் உறவினர்களிடம் தெரிவித்தனர். மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்து டாக்டர்களின் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் மணிகண்டனின் இதயத்தை சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும், கல்லீரலை மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கும், ஒரு சிறுநீரகத்தை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கும், 2 கருவிழிகள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது.

மணிகண்டனின் உடல் உறுப்புகள் திருச்சி வழியாக விமானம் மூலம் அந்தந்த ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story