கொரோனா அச்சுறுத்தலால் வாக்காளரின் உடல் வெப்பநிலை பரிசோதனை

கொரோனா அச்சுறுத்தலால் வாக்காளரின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்கு பெட்டிகளின் சீல்களை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உடைத்து, வாக்கு பெட்டியை திறந்து காண்பித்தனர். பின்னர் அந்த வாக்குப்பெட்டியை சீல் வைத்து, வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் சரியாக நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
கொரோனா அச்சுறுத்தலால் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளருக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. பின்னர் வாக்காளரின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வாக்காளருக்கு வலது கையில் அணிய பாலீத்தின் கையுறை வழங்கப்பட்டது. மேலும் முககவசம் அணிந்து வரும் வாக்காளர்களை மட்டும் வாக்குச்சாடிக்குள் அலுவலர்கள் அனுமதித்தனர். வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்தனர்.