கார் மோதி பொக்லைன் டிரைவர் பலி


கார் மோதி பொக்லைன் டிரைவர் பலி
x

ஆற்காட்டில் கார் மோதி பொக்லைன் டிரைவர் பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 28). ராணிப்பேட்டையில் பொக்லைன் டிரைவராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டையில் இருந்து மேச்சேரி நோக்கி சென்றுள்ளார். ஆற்காட்டில் உள்ள செய்யார் சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் சத்தியமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சத்தியமூர்த்தி வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story