ஓசிக்கு மது கொடுக்காததால் டாஸ்மாக் பாருக்கு வெடிகுண்டு மிரட்டல் -போதை ஆசாமி கைது


ஓசிக்கு மது கொடுக்காததால் டாஸ்மாக் பாருக்கு வெடிகுண்டு மிரட்டல் -போதை ஆசாமி கைது
x

ஓசிக்கு மது கொடுக்காததால் டாஸ்மாக் பாருக்கு வெடிகுண்டு மிரட்டல் -போதை ஆசாமி கைது.

கோவை,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வெடிக்க போவதாக கூறிவிட்டு போனை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போத்தனூர் போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த பீர் முகமது என்கிற பச்சை மிளகாய் பீர் முகமது (வயது 44) என்பது தெரியவந்தது.

இவர் டாஸ்மாக் பாருக்கு சென்று ஓசியில் மது கேட்டு தராததால் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது போத்தனூர், குனியமுத்தூர், உக்கடம், சென்னை உள்பட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

பீர்முகமது இது போன்று மிரட்டல் விடுத்து 4-வது முறையாக கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story