கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
உறுதிமொழி
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு வாகனம்
இந்த விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குனர் திலகவதி, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.