கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர்

உடுமலை

உடுமலையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. பேரணியை உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, அப்துல்கலாம் மக்கள் பாதுகாப்பு மற்றும் சேவை அறக்கட்டளை மற்றும் உடுமலை அரசு கலைக் கல்லூரி இணைந்து நடத்தியது. குட்டை திடலில் காந்தி சிலைக்கு முன்புறம் தொடங்கிய பேரணிக்கு உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு விஜயகுமார், ஜே.எம் 2 மாஜிஸ்திரேட்டு மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக குட்டைத்தடலில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வக்கீல் சங்கத் தலைவர் ஸ்ரீதர், உடுமலை ஆர் டி ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் கண்ணாமணி, திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துணை இயக்குனர் சந்தோஷ், உடுமலை தொழிலாளர் ஆய்வாளர் மதுமதி, ஆடிட்டர் கண்ணன் உள்ளிட்ட பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கோர்ட்டுகளில் நீதிபதிகள் முன்னிலையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நீதிபதிகள் உறுதி மொழியை வாசிக்க வக்கீல்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story