பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்


பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்
x

பாளையம் கிராமத்தில் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் பாளையம் கிராமத்தில் பால்கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அமுதாசேகர் தலைமை தாங்கினார். திமிரி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குமாரவேலு, சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால் கூட்டுறவு சங்க தலைவர் மணவாளன் வரவேற்றார். இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 70 பேருக்கு போனஸ் வழங்கினர்.

மேலும் ரூ.15.5 லட்சம் மதிப்பில் கூட்டுறவு சங்கம் கட்டுவதற்கு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. பூமி பூஜையை தொடங்கி வைத்தார். வேலூர் துணைப்பதிவாளர் (பால்வளம்), ஆவின் பொது மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.


Next Story