ராமநாதபுரத்தில் இன்று புத்தக கண்காட்சி
ராமநாதபுரத்தில் இன்று புத்தக கண்காட்சி தொடங்குகிறது.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் புத்தக திருவிழா தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த புத்தக கண்காட்சியில் 114 அரங்குகள் அமைத்து சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இன்று முதல் 19-ந்தேதி வரை நடைபெறுகின்ற இந்த புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் தமிழ் ஆர்வலர்கள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்துரைகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஓவிய கண்காட்சி, மூலிகை கண்காட்சி, பாரம்பரிய உணவு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.