வாலாஜாவில் புத்தக கண்காட்சி


வாலாஜாவில் புத்தக கண்காட்சி
x

வாலாஜாவில் புத்தக கண்காட்சியை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

வாலாஜாவில் நடைபெறும் புத்தக கண்காட்சியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.

புத்தக கண்காட்சி

வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத் துறையின் சார்பில் புத்தக கண்காட்சி நடக்கிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது:-

கல்விக்கு முக்கியத்துவம்

மாநிலம் முழுவதும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊர்களிலும் எங்கெல்லாம் நூலகம் உள்ளதோ அதனை மேம்படுத்தி வருகிறார்கள். ராணிப்பேட்டை சந்தை மேட்டில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நூலகத்துடன் டாக்டர் வரதராசனார் சிலை அமைக்கப்பட உள்ளது. அந்த அளவிற்கு முதல்-அமைச்சர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நமது மாவட்டத்தில் 52 ஆயிரத்து 81 லட்சம் பனை விதைகளை நட்டு சாதனைபடைத்தோம்.

பொதுமக்கள், அரசு அலுவலர்கள், இளைஞர்கள், மாணவ -மாணவிகள் ஆகியோர் அதிகப்படியான புத்தகங்களை வாங்கி பயன்பெறும் வகையில் 22-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. கலை, இலக்கியம், வரலாறு, தன்னம்பிக்கை, மருத்துவம், சுய முன்னேற்றம் என அனைத்து நூல்களும் இங்கு குவிக்கப்பட்டுள்ளன என்றார்.


Next Story