புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாத்தான்குளம் ராம.கோபால கிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகம், 14-வது வார்டு இல்லம் தேடி கல்வி, அரசு கல்லூரி நூலகத்துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து மாணவிகளுக்கு புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் நடராஜன், பொருளாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நூலகர் விஜயலட்சுமி வரவேற்றார். இல்லம் தேடி தன்னார்வலர் உமாமகேஸ்வரி, இயற்கை மருத்துவர் செல்வராஜ் மதுரம், புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பவுலின் ராபின், நூலகர்கள் நமச்சிவாயம், சண்முகவேல், யோகா ஆசிரியை ராஜலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட வலை தளங்களில் பொழுதை கழிப்பதை விடுத்து தினமும் நாளிதழ், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவும், புத்தகம், நாளிதழ் படிப்பதன் அவசியம், பயன்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. பாரதி கலை இலக்கிய பேரவை தலைவர் ஈஸ்வர் சுப்பையா, ஓய்வுபெற்ற தொடக்க கல்வி அலுவலர் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகர் சித்திரைலிங்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் உமாபாரதி, வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story