'புத்தாண்டில் புத்தகம் வாசிப்புக்கு உயிர் கொடுக்க வேண்டும்'-காந்தியவாதி விவேகானந்தன் வலியுறுத்தல்


புத்தாண்டில் புத்தகம் வாசிப்புக்கு உயிர் கொடுக்க வேண்டும்-காந்தியவாதி விவேகானந்தன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘புத்தாண்டில் புத்தகம் வாசிப்புக்கு உயிர் கொடுக்க வேண்டும்’ என காந்தியவாதி விவேகானந்தன் வலியுறுத்தினார்.

தென்காசி

நெல்லையில் காந்தியவாதி செங்கோட்டை விவேகானந்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நல்ல நூல்கள் வீட்டை அலங்கரிக்க தொடங்கும்போது நல்ல சிந்தனைகள் மனதை அலங்கரிக்கும். மது, புகை பழக்கம் என இளைஞர்கள் தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவார்கள். மனம் அலை பாய்வதை புத்தக வாசிப்பு தடுக்கும். செல்போன், கணினி வருகை புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டது. இந்த 2023-ம் புதிய ஆண்டில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக புத்தகங்கள் வழங்கி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் 236 பள்ளி நூலகங்களுக்கும், 23 கல்லூரிகள், 310 பொது நூலங்களுக்கும் புத்தகங்கள் வழங்கி இருக்கிறோம். மேலும் தென்காசி, நெல்லை மற்றும் மதுரை மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய 300 பள்ளிகளின் நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்க உள்ளோம். வருகிற பொங்கல் திருநாளில் ஒவ்வொரு மாணவரும் தங்களது வீடுகளில் குறைந்தபட்சம் 10 புத்தகங்களுடன் நூலகத்தை தொடங்க உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமூக ஆர்வலர்கள் வெங்கடாம்பட்டி திருமாறன், முத்துசாமி, ராம் மோகன், ஏகலைவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story