30-ந் தேதி வரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும்


30-ந் தேதி வரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும்
x

மாவட்டம் முழுவதும் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வருகிற 30-ந் தேதி வரை பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

மாவட்டம் முழுவதும் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வருகிற 30-ந் தேதி வரை பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் 36-வது கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், பஸ்நிலையங்கள், உழவர்சந்தைகள், பஜார், ஆட்டோநிறுத்தம், பள்ளிகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 788 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

பூஸ்டர் டோஸ்

இதுகுறித்து பொதுமக்களிடையே அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தொரப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி மேயர் சுஜாதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் 2-ம் தவணை பெரும்பாலானோர் செலுத்தி உள்ளனர். இந்த சிறப்பு முகாம்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த கொரோனா தடுப்பூசி போடும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 3,940 பணியாளர்கள் ஈடுபட்டனர். வருகிற 30-ந் தேதி வரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என்றார்.


Next Story