தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
தி.மு.க. வள்ளியூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வள்ளியூர் யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணை அமைப்பாளர் எரிக் ஜூட், இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் செல்வ சூடாமணி, ஒன்றிய அவைத்தலைவர் வேலு, தகவல் தொழில்நுட்ப அணி லெட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story