தனியார் நிறுவனத்தில் கடன்பெற்றுரூ.1½ லட்சம் மோசடி2 பேர் மீது வழக்கு


தனியார் நிறுவனத்தில் கடன்பெற்றுரூ.1½ லட்சம் மோசடி2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனத்தில் கடன்பெற்று ரூ.1½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 36). விழுப்புரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வரும் இவரிடம் செஞ்சி அருகே கடம்பூரை சேர்ந்த சுந்தரபாண்டியன்(35), கோகுல்நாத்(32) ஆகிய இருவரும் தனிநபர் கடன் ரூ.2 லட்சம் வாங்கியுள்ளனர். அதில் ரூ.50 ஆயிரத்தை மட்டும் திரும்ப செலுத்திய அவர்கள் மீதமுள்ள ரூ.1½ லட்சத்தை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர். மேலும் போலியான ஆவணங்கள் கொடுத்து கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சுந்தரபாண்டியன், கோகுல்நாத் ஆகியோர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story