செருப்பு கடைக்காரருக்கு பாட்டில் குத்து


செருப்பு கடைக்காரருக்கு பாட்டில் குத்து
x

செருப்பு கடைக்காரரை பாட்டிலால் குத்தியவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42). இவர் பாளையங்கோட்டையில் செருப்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிநாதன், இசக்கிராஜா ஆகியோருக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுப்பிரமணியனை சாதியைச் சொல்லி திட்டி பீர்பாட்டிலால் 2 பேரும் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கி ராஜாவை கைது செய்தனர். இசக்கிநாதனை தேடி வருகின்றனர்.


Next Story