பெட்டிக்கடைக்காரர் கைது


பெட்டிக்கடைக்காரர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரர் கைது

தூத்துக்குடி

கயத்தாறு:

திருமங்களகுறிச்சி பஞ்சாயத்து மூர்த்தீஸ்வரம் நடுத்தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் ராமர்பாண்டியன் (வயது 42). அவரது பெட்டிக்கடையில் கயத்தாறு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் கடையில் நடத்திய சோதனையில் 3 கிலோ 900 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமர் பாண்டியனை கைது செய்தனர்.


Next Story