கஞ்சா விற்ற சிறுவன் கைது


கஞ்சா விற்ற சிறுவன் கைது
x

நிலக்கோட்டை அருகே கஞ்சா விற்ற சிறுவன் கைது செய்யப்பட்டான்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், அங்குள்ள தென்னந்தோப்புக்குள் வைத்து கஞ்சா விற்பதாக விளாம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் கஞ்சா விற்று கொண்டிருந்த சிறுவனை மடக்கி பிடித்தனர். அவனிடம் இருந்து ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.


Next Story