சிறுவன் தற்கொலை


சிறுவன் தற்கொலை
x
தினத்தந்தி 24 Nov 2022 7:30 PM GMT (Updated: 24 Nov 2022 7:30 PM GMT)

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வேதனை அடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:-

காவேரிப்பட்டணத்தை அடுத்த இடைபையூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 16). இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத விரக்தியில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story