நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி சிறுவன் சாவு-தம்மம்பட்டி அருகே சோகம்
தம்மம்பட்டி அருகே நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
தம்மம்பட்டி:
நீச்சல் பழக...
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே மண்மலை விநாயகபுரத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் மதீஷ் (வயது 17). நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளான்.
இந்த நிலையில் மதீஸ், அதே பகுதியில் தனது உறவினருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்றார். அங்குள்ள மரத்தில் கயிற்றின் ஒரு பகுதியை கட்டினான். மற்றொரு பகுதியை தனது இடுப்பில் கட்டிக் கொண்டான்.
கிணற்றில் மூழ்கி சாவு
நீச்சல் பழகிய போது இடுப்பில் கட்டி இருந்த கயிறு அவிழ்ந்ததாக தெரிகிறது. இதனால் கிணற்றில் மூழ்கிய மதீஷ் பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலயை வீரர்கள், நிலைய அலுவலர் செல்லபாண்டியன் தலைமையில் விரைந்து வந்தனர்.
கிணற்றில் மூழ்கிய மதீஷ் உடலை மீட்டனர். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் மதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிணற்றில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.