ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து சாவு


ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து சாவு
x

திருப்பத்தூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை தொட்டியில் விழுந்து இறந்தது.

திருப்பத்தூர்

திடீர் மாயம்

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுசல்யா. திருப்பத்தூரை அடுத்த அங்கநாதவலசை பகுதியை சேர்ந்தவர். இவர் தனது தாய் வீட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார்.

இவர்களது மூத்த மகன் கிஷோர் (2½) நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென்று குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கவுசல்யா மற்றும் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

தொட்டியில் விழுந்து சாவு

அதைத்தொடர்ந்து இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டிற்கு அருகில் தேடியபோது வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் குழந்தை விழுந்திருப்பது தெரிந்தது.

உடனடியாக குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்துவிட்டது தெரிய வந்தது. இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story