எடப்பாடி அருகே சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
எடப்பாடி அருகே சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
எடப்பாடி:
சிறுவன்
ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்- வசந்தி தம்பதிகளுக்கு அருண், வெங்கடேஷ் (வயது 17) மற்றும் மணிகண்டன் என்ற 3 மகன்கள் உண்டு. இந்த நிலையில் மஞ்சுநாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால் வெங்கடேஷ் தனது தாயார் மற்றும் சகோதரர்களுடன் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வெங்கடேஷ் கோனேரிப்பட்டி காவிரி கதவணை பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வெங்கடேஷ் தான் திருநங்கையாக மாறப்போவதாக அடிக்கடி குடும்பத்தினரிடம் சொல்லி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 17-ந் தேதி வெங்கடேஷ் விஷத்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
விசாரணை
இந்த நிலையில் நேற்று மாலை வெங்கடேஷ் தான் வேலை செய்யும் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற பூலாம்பட்டி போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.