லாரி மோதி சிறுவன் படுகாயம்


லாரி மோதி சிறுவன் படுகாயம்
x

முத்துப்பேட்டை அருகே லாரி மோதி சிறுவன் படுகாயம் அடைந்தான். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

நாகை மாவட்டம் துளசியாபட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் ரகுமத்துல்லா. இவருடைய மகன் முகமதுமர்வீன்(வயது16). இவர் முத்துப்பேட்டையை அடுத்த கரையாங்காடு கிராமத்திலிருந்து தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றார். அப்போது எதிரே வேதாரண்யத்திலிருந்து முத்துப்பேட்டையை நோக்கி சென்ற மினி லாரி முகமதுமர்வீன் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முகமதுமர்வீன் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முத்துக்பேட்டை போலீசாா் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த பாண்டி வேப்பஞ்சேரி கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் செந்தில்நாதனை(32) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story