லாரி மோதி வாலிபர் பலி


லாரி மோதி வாலிபர் பலி
x

நெல்லை அருகே லாரி மோதி வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

கன்னியாகுமரி மாவட்டம் பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் சாமிதாஸ். இவருடைய மகன் அஸ்வின் (வயது 20) இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஊருக்கு வந்திருந்த அஸ்வின் கடந்த 7-ந் தேதி மோட்டார் சைக்கிளில் கோவைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். நெல்லை அருகே உள்ள தாழையூத்து நான்கு வழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அஸ்வினை, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் நேற்று முன்தினம் இரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story