தீக்குளித்து மாணவன் தற்கொலை


தீக்குளித்து மாணவன் தற்கொலை
x

நன்னிலம் அருகே தீக்குளித்து மாண வன் தற்கொலை செய்து கொண்டான்.

திருவாரூர்

நன்னிலம்;

நன்னிலம் அருகே தீக்குளித்து மாண வன் தற்கொலை செய்து கொண்டான்.

பள்ளி மாணவன்

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருைடய மகன் சஞ்சய் (வயது15). பேரளத்தில் ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த சஞ்சய் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறி வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் மொட்டைமாடிக்கு சென்ற சஞ்சய் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு

இதில் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சஞ்சய் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் நேற்று உயிரிழந்தான். இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story