மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வேட்டவலம் அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேட்டவலம்
வேட்டவலம் அருகே பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர்17 வயது மாணவி. இவர் அண்டம்பள்ளம் கிராமத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 3-ந் தேதி தேர்வுக்கு சென்ற மாணவி அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பெற்றோர் வேட்டவலம் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாணவியை பன்னியூர் கிராமத்தை சேர்ந்த மண்ணு என்பவரின் மகன் அசோக்குமார் (22) கடத்தியதும், அவர் சென்னையில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
மேலும் பன்னியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மாணவியுடன் அசோக்குமார் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அசோக்குமாரை கைது செய்தனர்.
மேலும் மாணவியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.