கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
பொதக்குடியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
திருவாரூர்
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே உள்ள, பொதக்குடியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் மல்லிகா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மழைக்காலம் தொடங்குவதால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், கொசு மருந்து அடிக்க வேண்டும், தெருக்களில் சுற்றித்திரியும் மாடு, நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். இந்த நிலையில், பொதக்குடி ஊராட்சி தெருக்களில் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக செயல்படுத்த, பொதக்குடி ஊராட்சிக்கு நிதி வழங்காததை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சியினர் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆர்ப்பாட்டத்தில் பொதக்குடி பகுதியில் சாலை மற்றும் அடிப்படை வசதிகளை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story